United Kingdom:மகப்பேறு விடுப்பு எடுத்த பெண் – மீண்டும் கருத்தரித்ததால் பணிநீக்கம்!

Advertisements

மகப்பேறு விடுப்பிலிருந்து பணிக்குத் திரும்பிய பெண் மீண்டும் கர்ப்பமானதால், நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்தவர் நிகிதா ட்விட்சென். First Grade Project என்ற நிறுவனத்தில் நிர்வாக உதவியாளராகத் தனது பணியைத் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், 2022-ல் இவர் கர்ப்பம் அடையவே, மகப்பேறு விடுமுறை எடுத்துவிட்டு, சிறிது நாட்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். குழந்தை பிறந்தபின், மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார். பின் சில தினங்களில் தான் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாகவும், கர்ப்பமுற்று எட்டு வாரங்கள் ஆகிவிட்டதாகவும் ஆஃபிஸில் கூறியுள்ளார்.

இதற்கு நிர்வாக இயக்குனர் ஜெர்மி மோர்கன் உடன்பாடு இல்லாமல் விடுப்பு கொடுத்துள்ளார். தொடர்ந்து தான் மீண்டும் பணிக்குத் திரும்புவோம் என்று நிகிதா நம்பியிருந்த நிலையில், அலுவலகத்திலிருந்து எந்தத் தகவலும் அவருக்குக் கிடைக்கவில்லை.

தொடர்ந்து “நிறுவனத்தின் நிதி பற்றக்குறை போன்ற காரணங்களை முன்னிறுத்தி நிகிதாவை பணியிலிருந்து பணியிடை நீக்கம் செய்கிறோம்” என ஜெர்மி மோர்கன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து வேலை வாய்ப்பு தீர்பாயத்தில் இதுதொடர்பாக நிகிதா வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதை விசாரித்த தீர்ப்பாயம், “நிகிதாவின் பணிநீக்கம் நியாமற்றது மற்றும் பாரபட்சமானது. அவரது மகப்பேறு என்ற கடினமான காலங்களில், கவலையையும் துயரத்தையும் அவருக்குக் கூடுதல் சுமையாகக் கொடுத்துள்ளீர்கள். எனவே, first Grade Project மற்றும் ஜெர்சி மோர்கன் இருவரும் இணைந்து நிகிதாவிற்கு 28,706 பவுண்டுகள் இழப்பீடு வழங்க வேண்டும்.” என உத்தரவிட்டுள்ளது.

 

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *