அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி: இந்திய அணி தோல்வி..!

Advertisements

6 அணிகள் இடையிலான சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவின் இபோ நகரில் நடைபெற்றது. இதன் லீக் சுற்று முடிவில் பெல்ஜியம் 13 புள்ளிகளுடன் முதலிடமும், இந்தியா 12 புள்ளிகளுடன் 2-வது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறின. நியூசிலாந்து , மலேசியா , கனடா , தென்கொரியா அணிகள் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தன.

இந்நிலையில் இந்த தொடரின் சாம்பியன் யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா-பெல்ஜியம் அணிகள் மோதின.

சம பலம் வாய்ந்த இரு அணிகள் மல்லுக்கட்டியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணி கோல் அடித்து முன்னிலை பெற்றது. இந்திய அணி பதில் கோல் திருப்ப எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.இதனால் முழு நேர ஆட்ட முடிவில் இந்திய அணி 0-1 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *