Unemployment: இளம்பெண் தற்கொலை!

Advertisements

வேலை கிடைக்காத விரக்தியில் இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயிலை சேர்ந்த முருகன் என்பவரது மூத்த மகள் ஸ்வேதா. இவருக்கு வயது 21 ஆகும் நிலையில் சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து, பி.காம் படித்து வந்துள்ளார். கல்லூரி படிப்புக்குப் பிறகு ஸ்வேதா பல்வேறு நிறுவனங்களில் நேர்க்காணலுக்கு சென்றுள்ளார். ஆனால், ஸ்வேதாவுக்கு வேலை கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தான் சென்னை அம்பத்தூரில் உள்ள நிறுவனம் ஒன்றிற்கு நேர்முக தேர்வுக்காக ஸ்வேதா போனதாகவும், அங்கு வேலை கிடைக்காததால் மன விரக்தியில் ஸ்வேதா வீடு திரும்பியதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து வேலை கிடைக்காத சோகத்தில் இருந்த ஸ்வேதா தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். நீண்ட நேரமாகியும் அறை கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் உள்ளே சென்று பார்த்ததில் ஸ்வேதா சடலமாக இருந்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருமுல்லைவாயில் போலீசார், ஸ்வேதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஸ்வேதா 12ம் வகுப்பில் பள்ளி அளவில்  முதலிடம் வந்ததும், படித்து வேலை கிடைக்காமல் இருந்ததும் மனதளவில் அவருக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது தெரிய வந்தது.

பின்குறிப்பு- தற்கொலை எதற்கும் தீர்வாகாது. மன உளைச்சலோ அல்லது மன அமைதி இல்லாமல் உணர்ந்தால் சரியான மருத்துவர் அல்லது மனநல ஆலோசகரை அணுகலாம்.

ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயிலை சேர்ந்த முருகன் என்பவரது மூத்த மகள் ஸ்வேதா. இவருக்கு வயது 21 ஆகும் நிலையில் சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் படித்துப்,  பி.காம் படித்து வந்துள்ளார். கல்லூரி படிப்புக்குப் பிறகு ஸ்வேதா பல்வேறு நிறுவனங்களில் நேர்க்காணலுக்கு சென்றுள்ளார். ஆனால், ஸ்வேதாவுக்கு வேலை கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தான் சென்னை அம்பத்தூரில் உள்ள நிறுவனம் ஒன்றிற்கு நேர்முக தேர்வுக்காக ஸ்வேதா போனதாகவும், அங்கு வேலை கிடைக்காததால் மன விரக்தியில் ஸ்வேதா வீடு திரும்பியதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து வேலை கிடைக்காத சோகத்தில் இருந்த ஸ்வேதா தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். நீண்ட நேரமாகியும் அறை கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் உள்ளே சென்று பார்த்ததில் ஸ்வேதா சடலமாக இருந்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருமுல்லைவாயில் போலீசார், ஸ்வேதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஸ்வேதா 12ம் வகுப்பில் பள்ளி அளவில்  முதலிடம் வந்ததும், படித்து வேலை கிடைக்காமல் இருந்ததும் மனதளவில் அவருக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது தெரிய வந்தது.

பின்குறிப்பு- தற்கொலை எதற்கும் தீர்வாகாது. மன உளைச்சலோ அல்லது மன அமைதி இல்லாமல் உணர்ந்தால் சரியான மருத்துவர் அல்லது மனநல ஆலோசகரை அணுகலாம்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *