உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வர முயற்சி.!!

உக்ரைன் – ரஷ்யா இடையில் நான்காண்டுகளாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் இன்று அமெரிக்கா உள்ளிட்ட மூன்று நாடுகள் பங்கேற்கும் பேச்சு நடைபெறுகிறது.

2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் நாள் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது. அதன்பிறகு தொடர்ந்து நாலாண்டுகளாகக் கடும் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறார்.

அதன் ஒருபகுதியாக டிரம்பின் பிரதிநிதிகள் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் அதிபர் புடினுடன் பேச்சு நடத்தினர். இந்தப் பேச்சுக்கள் மிகவும் வெளிப்படையாகவும், பயனுள்ளதாகவும் இருந்ததாக ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. இந்நிலையில் நான்காண்டுகளில் முதன்முறையாக இன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சு நடைபெறுகிறது.

இந்தப் பேச்சுக்கள் குறித்துக் கருத்துக் கூறிய டிரம்ப், இந்த முறை புடின், செலன்ஸ்கி ஆகியோரிடையே அமைதிக்கான உடன்பாடு எட்டப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *