
கர்நாடக ஆளுநர் வெளிநடப்பு செய்ததைக் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில் முதலில் தமிழ்நாடு, பின்னர் கேரளா, இப்போது கர்நாடகா என ஆளுநர்கள் வெளிநடப்பு தொடர்கிறது.
பின்னர், மாநில அரசுகளால் தயாரிக்கப்பட்ட உரையைப் படிக்க மறுக்கும் ஆளுநர்கள், கட்சி முகவர்கள் போல நடந்துகொண்டு, மாநில அரசுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறார்கள் எனக் கூறினார்.
இதையடுத்து நான் முன்பு கூறியது போல், முதல் ஆண்டு சட்டமன்றக் கூட்டத்தொடரை ஆளுநர் உரையுடன் தொடங்கும் நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவருவதே இப்போதைக்கு ஒரே தீர்வு என்றார்.
மேலும், இந்தியா முழுவதும் உள்ள ஒத்த எண்ணம் கொண்ட எதிர்க்கட்சிகளுடன் திமுக கலந்தாலோசித்து, அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இந்தப் பொருத்தமற்ற நடைமுறையை ஒழிக்க அரசியலமைப்புத் திருத்தத்தை மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.




