Advertisements

அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கும் நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா கடும் தாக்குதல் நடத்தியுள்ளதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கும் நிலையில், உக்ரைன் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில், ரஷ்யா மிகக் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது. இதில், ரஷ்ய ராணுவம் 450 ட்ரோன்கள், 70 ஏவுகணைகள் மூலம் உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட 5 முக்கியப் பகுதிகளைக் குறிவைத்து தாக்கியதில், 10 பேர் காயமடைந்தனர்.
மேலும், குறிப்பாக மின் கட்டமைப்புகள் மோசமாகச் சேதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் கடும் குளிரில் வாடி வருகின்றனர். இதுகுறித்து, உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி, பேச்சுவார்த்தையைவிட மக்களைத் துன்புறுத்துவதிலேயே ரஷ்யா அதிக ஆர்வம் காட்டுகிறது என்று குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து, ரஷ்யாவுக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், தற்காப்புக்காக உக்ரைனுக்குக் கூடுதல் ஆயுதங்களை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
Advertisements



