உக்ரைன் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல் செய்ததால் குழந்தை ஒன்று பலி..!

Advertisements

அமைதி பேச்சுவார்த்தை தொடங்கும் முன் உக்ரைன் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல் செய்ததால் குழந்தை ஒன்று பலியாகிவுள்ளது.
ரஷ்யா போர் மூன்றாண்டுகளை கடந்து நீடித்து வரும் நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோருடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் உக்ரைன் மீதான தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும் என ரஷ்யாவை வலியுறுத்தினார்.

மேலும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தினால் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார். இதனை ரஷ்யா ஏற்று கொண்டாலும் லட்சியங்கள் நிறைவேறும் வரை போர் தொடரும் என பகிரங்கமாக தெரிவித்ததுள்ளனர்.

பின்னர் உக்ரைனின் கிராமடோர்ஸ்க் பகுதி மீது ரஷ்யா ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் ஒரு அடுக்குமாடி கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது. இதில் 10 வயது சிறுவன் உயிரிழந்தான். மேலும் 24 பேர் காயமடைந்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *