திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது – விஜய் விமர்சனம்..!

Advertisements

திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மக்களிடையே பெருகி வரும் அன்பையும் ஆதரவையும் பொறுத்துக்கொள்ள முடியாத வெற்று விளம்பர மாடல் திமுக அரசு தொடர்ந்து அரசியல் காழ்ப்புணர்ச்சியில் ஈடுபடுவதாகத் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, பொதுச்செயலாளர் ஆனந்த் அவர்கள் மீதும், கழகத் தோழர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு பயத்தின் உச்சத்தில் திமுக இருப்பதாக விஜய் தெரிவித்துள்ளார்.

இதனால், ஆட்சியாளர்கள் தங்களின் தூக்கத்தை இழந்து முழு நேரமும் தவெக வீழ்த்துவதைப் பற்றியே சிந்தித்து, காவல்துறைக்கு நெருக்கடி கொடுத்து செயல்பாட்டை முடக்க நினைக்கிறார்கள் என்றும் கூறினார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *