அமெரிக்க எம்.பி. இந்தியாவுக்கு பகிரங்க மிரட்டல்.!

உங்கள் பொருளாதாரத்தை அழித்து விடுவோம் என்று அமெரிக்க எம்.பி.  இந்தியாவுக்கு பகிரங்க மிரட்டல் அளித்துள்ளார்.

உக்ரைன் மீது போர் நடத்தி வருவதால் ரஷியா மீது அமெரிக்கா மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடை அமலில் உள்ளது. பின்னர் இந்தியா, சீனா, பிரேசில் நாடுகள் ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது.

இந்த வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு ரஷியா போரை நீட்டித்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.

மேலும் டிரம்ப் உடைய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள எம்.பி. லிண்ட்சே கிரகாம்  அமெரிக்க செய்தி நிறுவனத்தை சந்தித்து சீனா, இந்தியா, பிரேசில் நாடுகள் மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போர் நீடிக்க அனுமதித்தால் உங்கள் பொருளாதாரத்தை நாங்கள் அழித்து விடுவோம் என்று புதிய மிரட்டல் ஒன்றை அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *