CM Stalin: சேமிப்பு கிடங்கு-ஆய்வுக் கூடங்கள் திறப்பு!

Advertisements

பால்வளத்துறை சார்பில் கட்டப்பட்ட சேமிப்பு கிடங்கு-ஆய்வுக் கூடங்கள் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பால்வளத்துறை சார்பில் 2 கோடியே 14 லட்சம் ரூபாய் செலவில் ஈரோட்டில் 1500 மெட்ரிக் டன் கொள்ளளவு சேமிப்புக் கிடங்கு, திருநெல்வேலி மாவட்ட ஒன்றியத்தில் தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி நிதியுதவியின் மூலம் 1 கோடியே 21 லட்சம் ரூபாய் செலவில் மகளிர் பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் நூலகம், ஆய்வகம், விடுதி வசதியுடன் கூடிய பயிற்சி நிலையக் கட்டிடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

Advertisements

மேலும் தருமபுரியில் 2 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவில் அலுவலகத்துடன் கூடிய பால் கொள்முதல் பிரிவுக் கட்டிடம், திருவண்ணாமலையில் பால் பவுடர் ஆலையில் 2 கோடியே 93 லட்சம் ரூபாய் செலவில் 1500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட பால் பவுடர் சேமிப்புக் கிடங்கு, திருப்பூரில் 3 கோடி ரூபாய் செலவில் திருப்பூர் மாவட்டப் பால் உற்பத்தியாளர் ஒன்றியத்திற்கான அலுவலகக் கட்டிடம் என மொத்தம் 12 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ.வேலு, மு.பெ.சாமி நாதன், மனோ தங்கராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *