Ukraine:போரை முடிவுக்குக் கொண்டு வரச் சீனாவுடன் பொதுவான இடத்தில் பேச விரும்புகிறோம்!

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து மூன்று ஆண்டுகளாகியுள்ளது. இதனால் இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவு மிகவும் சீர்குலைந்துள்ளது. சீனா ரஷியாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. நட்பு நாடாக இருந்து வருகிறது. இதனால் சீனாவால் ரஷியா- உக்ரைன் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வர வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

இந்த நிலையில் உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலேபா சீனாவுக்கு சென்றுள்ளார். ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு உக்ரைன் மீது படையெடுத்தபின் உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி முதன்முறையாகச் சீனா சென்றுள்ளார்.

உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலேபா சீன வெளியுறவுத்துறை மந்திரியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பல்வேறு விசயங்கள்குறித்து ஆலோசனை நடத்தினர். உக்ரைன- ரஷியா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ரஷியா உடனான போரை முடிவுக்குக் கொண்டு வரச் சீனாவுடன் பொதுவான இடத்தில் பேச்சுவார்த்தையை விரும்புவதாக உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.

“நியாயமான மற்றும் நிலையான அமைதி நோக்கிச் செல்வது எங்களுக்கு அவசியம். சீனா இதில் முக்கியமான பங்கு வகிக்க முடியும்” என்றார்.

ஒருமித்த கருத்தோடு, இணைந்து அரசியல் நெருக்கடியைத் தீர்க்கச் சர்வதேச சமூகத்தினருக்கு சீனா உதவி செய்யும் எனச் சீனாவின் வெளியுறவுத்துறை மந்திரி மாவோ நிங் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் கடந்த மாதம் நடைபெற்ற அமைதி மாநாட்டில் சீனா கலந்து கொள்ளவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *