ரஷ்யாவின் டிரோன் தாக்குதலில் சிறுவன் உயிரிழப்பு..!

Advertisements

உக்ரைனின் மத்தியப் பகுதிகளில் ரஷ்யா டிரோன் தாக்குதல் நடத்தியதில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

உக்ரைனின் மத்தியப் பகுதிகளில் ரஷ்யா 137 ஆளில்லா டிரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த, டிரோன் தாக்குதலில் 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளாக உக்ரைன் விமானப்படைத் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, ரஷ்ய துறைமுகங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகிய இடங்களை குறிவைத்து உக்ரைன் தாக்குதல்களை நடத்தி உள்ளது. இந்த, தாக்குதலில் 85 உக்ரைன் டிரோன்களை ரஷ்யா சுட்டு வீழ்த்தியுள்ளது. இதற்கிடையே, ரஷ்ய அதிபர் புதின் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள சூழலிலும் இந்த தாக்குதல் நடந்துள்ளது  என குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *