ஒப்பந்தங்களை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது : கத்தார் கண்டனம்..!

அமெரிக்காவின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் தொடர்ந்து மீறி வருவதாக கத்தார் பிரதமர் ஷேக் முகமது குற்றம் சாட்டியுள்ளார்.

காசாவின் டெல் அல்ஹவா பகுதியில் பயணிகள் மினி பேருந்தை குறிவைத்து இஸ்ரேல் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல்  நடத்தியுள்ளது. இதில், 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பெண்கள், குழந்தைகள் உட்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து கத்தார் பிரதமர் ஷேக் முகமது அந்நாட்டு ஊடகத்திற்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், காசாவில் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளை எளிதாக்குவதற்கான கத்தாரின் முயற்சிகளை ஆரம்பத்திலிருந்தே இஸ்ரேல் சீர்குலைக்க முயன்று வருவதாகக் குற்றம் சாட்டினார். மருத்துவமனைகளும் பள்ளிகளும் குறிவைத்து தாக்கப்படுவது, நியாயப்படுத்த முடியாது என்று கூறினார்.

அமெரிக்காவின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் தொடர்ந்து மீறி வருவதாகவும், காசாவில் 1400க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *