சிவில் சேவை மற்றும் யு.பி.எஸ்சி குறித்து பிரதமர் மோடி பெருமிதம்..!

அரசுகள் மாறினாலும், தொழில்நுட்பம் வளர்ந்தாலும் யு.பி.எஸ்சி மீதான நம்பிக்கை எப்போதும் மாறாமல் உறுதியாக உள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தில்லியில் நடைபெற்ற யு.பி.எஸ்.சி.யின் 100 ஆண்டுகாலப் பயணத்தைக் கொண்டாடும் நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது, யு.பி.எஸ்.சி.யின் 100 ஆண்டுகாலப் பயணத்தைக் கொண்டாடும் அதே வேளையில், அதன் உன்னதமான பாரம்பரியத்தையும் கொண்டாடும் நாளாகும் என்று தெரிவித்தார்.
இது ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான இளைஞர்கள் கொண்டிருக்கும் லட்சியத்தைக் கொண்டாடும் நிகழ்வாகும் என்று கூறினார். மேலும், ஒவ்வொரு இந்தியரும் இந்த அமைப்பின் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் கொண்டாடும் நிகழ்வுமாகும் என்று தெரிவித்தார். இந்த 100 ஆண்டுகாலப் பயணத்தில் தலைமுறைகள் மாறின,
அரசுகள் மாறின, தொழில்நுட்பம் வளர்ந்தது, பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டன என்று கூறினார். ஆனால், யு.பி.எஸ்.சி. மீதான நம்பிக்கை மட்டும் என்றும் மாறாமல் உறுதியாக உள்ளதாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *