வெற்றி தோல்வி கவலைப்படாமல் எம்ஜிஆரோடு தோள் கொடுத்து நின்றவர் நடிகர் சிவாஜி கணேசன் என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 99 வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அடையாறில் உள்ள அவரது உருவச்சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ராஜ்மோகன், வெங்கடரமணன், வன்னியரசு, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், நடிகர் நாசர் மற்றும் சிவாஜி கணேசனின் குடும்பத்தினர் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
இதன் பின்னர், மணிமண்டபத்தில் அவரது வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டனர். இதன் பின்னர், சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வாய்ப்பளித்த முதலமைச்சர் விஜய்க்கு நன்றியைத் தெரிவித்தார்.
பொதுவாழ்க்கையில் நடிகர் சிவாஜி கணேசன் பல நிலைகளை எட்ட முடியாவிட்டாலும் அவர் குழந்தை மனம் கொண்டவர் என்று கூறினார். வெற்றி தோல்வி கவலைப்படாமல் எம்ஜிஆரோடு தோள் கொடுத்து நின்றவர் என்று குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து, பள்ளிகல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசியபோது,
நடிகர் திலகத்தின் 100 ஆண்டு எட்டு விடும் தூரத்தில் இருப்பதாகவும், நூற்றாண்டு விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று கூறினார். இது குறித்து முதலமைச்சரிடம், கலந்து பேசி உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.


