ஓட்டுக்கு அதிக பணம் தருவது தவெகவினர்தான்: பெ. சண்முகம் பகீர் குற்றச்சாட்டு.!

இடைத்தேர்தலில் ஓட்டுக்கு அதிக பணம் கொடுப்பது தவெகவினர்தான் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுராந்தகத்தில் தவெகவினர்தான் ஓட்டுக்கு அதிக பணம் கொடுப்பதாகக் குற்றம் சாட்டினார். நாங்கள் அங்குப் பிரசாரத்துக்குச் சென்றபோது கிராம மக்கள் தன்னிடம், எல்லோரும் பணம் கொடுக்கிறார்கள் நீங்கள் பணம் கொடுக்கவில்லையே என்று கேட்டதாகக் கூறினார்.
எந்தெந்தக் கட்சி எல்லாம் பணம் கொடுத்தார்கள் என்று கேட்டபோது, தவெகவினர் தான் ஓட்டுக்கு அதிக பணம் கொடுத்ததாகச் சொன்னார்கள் என்று தெரிவித்தார். எனவே இதற்குத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சம்மந்தப்பட்ட கட்சித் தலைவர்களும் பதில் சொல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *