
முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் இன்று நடந்தது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சான்றிதழ்கள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டபோது தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பட்டது. இதைப் பாடிய அரசுப் பெண் ஊழியர்கள் பாடலைப் பிழையுடன் தவறாகப் பாடினார்கள்.
நிகழ்ச்சி முடிந்ததும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களைச் சந்தித்து பேசினார். அப்போது தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் பதில் அளித்தபோது, தவறாகப் பாடப்படவில்லை. ‘டெக்னிக்கல்’ தவறு தான் ‘மைக்’ சரியாக வேலை செய்யவில்லை. இரண்டு மூன்று இடத்தில் அவங்க பாடும்போது குரல் கேட்கவில்லை.
அதனால் மறுபடியும் மீண்டும் முதலிலிருந்து தமிழ்த்தாய் வாழ்த்தைச் சரியாகப் பாடி இருக்கிறோம். அது முடிந்ததும் தேசிய கீதமும் ஒழுங்காகப் பாடப்பட்டது. தேவை இல்லாமல் மீண்டும் ஏதும் பிரச்சனையைக் கிளப்பி விடாதீர்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

