
மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டெல்லியை எளிதில் வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றிப் பெற்றுள்ளது.
நவி மும்பையில் மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 11 ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூரு, டெல்லி அணிகள் மோதின. இதில், பெங்களூரு அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில், மிகவும் சிறப்பாக அதிரடியாக விளையாடிய ஷபாலி வர்மா 62 ரன்களை எடுத்தார்.
இதையடுத்து, 167 ரன்கள் மட்டும் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 18 ஓவர்களில் 169 ரன்கள் எடுத்து, அபார வெற்றி பெற்றது.
போட்டியில் அணியின் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா அதிரடியாக விளையாடி 96 ரன்னில் அட்டமிழந்தார்.



