
சென்னை:
பிரபல நடிகர் பப்லு ப்ரித்திவிராஜ்ஜின் முன்னாள் காதலி ஷீத்தல் குறித்து, மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்… ஷீத்தலுக்கு திருமணம் என்றும் அந்தப் பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் அறித்திருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர் நடிகர் பப்லு – ஷீத்தல் ஜோடி… தன்னை விட 30 வயது குறைவான இந்தப் பெண்ணைக் காதலித்தார் 57 வயதான பப்லு ப்ரித்விராஜ். இதனைச் சமூக வலைத்தளத்திலும் அறிவித்து ஷீத்தலை அறிமுகப்படுத்தினார்.

போட்டோக்கள்:
பிறகு 2 பேரும் ஒன்றாக ஒரே வீழ்ந்து வாழத் துவங்கினர். இருவரும் அதிகமான போட்டோக்கள், வீடியோக்களைச் சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வந்தனர். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு திடீரென்று இந்தப் போட்டோ, வீடியோக்களை இருவருமே சோசியல் மீடியாவிலிருந்து டெலிட் செய்து விட்டனர்.
இதுகுறித்து பப்லு, ஷீத்தலிடம், “இருவரும் பிரிந்துவிட்டீர்களா?” ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்குப் பப்லு, “சில தவறுகள் செய்துவிட்டேன், இப்போது தெரிந்து விட்டேன்” என்று பதிலளித்திருந்தார். அதாவது பிரிந்துவிட்டோம் என்று வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
பரிசுப் பொருட்கள்:
ஆனால், இருவரும் பிரிந்து விட்டோம், பப்லு கொடுத்த அனைத்து பொருட்கள் பரிசு என அனைத்தையும் திருப்பிக் கொடுத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன் என்று ஷீத்தல் தன்னுடைய பேட்டிகளில் ஓபனாகவே கூறியிருந்தார்.
இப்படிப்பட்ட சூழலில்தான், ஷீத்தல் இன்னொரு நபரைக் காதலித்து வருவதாகவும், அவரைத் திருமணம் செய்யப் போவதாகவும் தகவல்கள் கசிந்தன. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், King 24X7 என்ற யூடியூப் சேனலுக்குப் பேட்டி ஒன்றை தந்துள்ளார்… அந்தப் பேட்டில் சொல்லி உள்ளதாவது:
விதவித வீடியோ:
“நடிகர் பப்லு, தமிழ், தெலுங்கு, மலையாளம் சினிமாக்களில் கதாநாயகனாக நடித்தவர்… டிவி சீரியல்களிலும் நடித்தவர்… இவருடைய 16 வயது மகன், ஒரு ஸ்பெஷல் குழந்தை ஆவார்… தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்தவர் பப்லு. சமீபத்தில் மாடல் அழகி ஷீத்தல் என்பவருடன் லிவிங் டூக்கெதரில் வாழ்ந்து வந்தார்… விரைவில் அவரைத் திருமணம் செய்யப் போவதாகவும் அறிவித்தார்.
பிறகு தினந்தோறும் இவர்கள் எடுத்துக் கொண்ட நெருக்கமான போட்டோக்களையும், தோசை சுட்டு ஷீத்தலுக்கு பரிமாறுவது என விதவிதமான வீடியோக்களையும் தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் எடுத்துப் பதிவிட்டு வந்தார். பிறகு இருவருக்கும் திடீரெனச் சண்டை வந்துவிட்டது. இறுதியில் இருவருமே நண்பர்களாகப் பிரிந்து விட்டார்கள்… ஷீத்தலை பற்றிப் பப்லு எதுவுமே சொல்வதில்லை. பப்லுவை பற்றியும் ஷீத்தல் எதுவுமே சொல்வதில்லை.
பப்லு மவுனம்:
இந்நிலையில், ஷீத்தல் தன்னுடைய திருமணத்தை அறிவித்திருக்கிறார். தற்போதைய காதலர், ஒரு தடகள பயிற்சி வீரர்… பாடி பில்டர்… கர்நாடகத்தை சேர்ந்தவர். பெங்களூரில் ஜிம் வைத்திருக்கிறார். அவரது பெயர் சுமேஷ் சோமசேகரன். இவரைதான் ஷீத்தல் திருமணம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார். ஆனால் ஷீத்தலின் இந்தத் திருமணம்குறித்து பப்லு இதுவரை எதுவுமே சொல்லவில்லை” என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.

