
சனாதனத்தை ஒழிப்போம் எனக் கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலகக் கோரியும், பா.ஜ.க. சார்பில் தமிழகம் முழுவதும் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது…
அதன்படி இன்று தமிழகம் முழுவதும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் எச்.ராஜா, மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட பாஜக நிர்வாகிகள்கைது செய்யப்பட்டனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சென்னை மாவட்ட பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஒன்றுகூடிய பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய அண்ணாமலை சனாதனம் குறித்து தெரியாமல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிவருவதாகக் குற்றம்சாட்டினார். மேலும் சனாதனம் குறித்து முதலமைச்சர் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும் என்றும் புரியாமல் பேசுவதை நிறுத்த வேண்டும். அமைச்சர் சேகர்பாபு சனாதனம் குறித்து பேசுவது வேடிக்கையாகவுள்ளது.கண்டிப்பாக அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வேண்டும். தெய்வம் கண்டிப்பாக அதற்கான தண்டனையைத் தரும் என அண்ணாமலை பேசினார். தொடர்ந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் புறப்பட்டனர்.
பேரணியாகச் சென்ற அண்ணாமலை சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.அப்போது காவல்துறையினர் பேச்சுவார்தை நடத்தினர்.பேச்சுவார்தையில் உடன்பாடு எட்டாததால் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் வள்ளுவர்கோட்டத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது.
போலீசார் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அண்ணாமலை போராட்டத்தைக் கைவிட்டனர்.


