Udaipur Tailor Murder: அஷோக் கெக்லாட் குற்றச்சாட்டு..!

உதய்பூர் தையல்கடை காரர்   கொல்லப்பட்ட விவகாரத்தில் பாஜகவிற்கு தொடர்பு இருப்பதாக அஷோக் கெக்லாட் குற்றச்சாட்டு..!

பாஜகவைச் சேர்ந்த நுபுர் ஷர்மா கட்சியிலிருந்து நீக்கப்பட்டது தொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்த உதய்பூரைச் சேர்ந்த கண்ணையா லால்  என்ற  தையல் கடைகாரரை கடையின் உள்ளேயே புகுந்து  தாக்கி கடந்த வருடம் ஜூன் 28-ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். கொலை செய்தவர்கள் ரியாஸ் அக்தாரி மற்றும் கவுஸ் முகம்மத் இருவரை போலீசார் கைது செய்தனர்.

ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அஷோக் கெக்லாட் உதய்பூர் தையல் கடைகாரர் கன்னையா லால் தெலி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜகவுக்கு  தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை ஜோத்பூருக்கு ஒரு பிரச்சார பயணத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய ராஜஸ்தான் முதல்வர், தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ) பதிலாக ராஜஸ்தான் காவல்துறையின் சிறப்பு நடவடிக்கை குழு (எஸ்.ஓ.ஜி) இந்த வழக்கை கையாண்டிருந்தால், விசாரணை நடந்திருக்கும் என்று கூறினார்.

கடந்த வருடம் ஜூன் 28-ஆம் தேதி பட்டப்பகலில் உதய்பூரில் கடையில் துணி தைத்துக் கொண்டிருந்த நபரை கொலை செய்த சம்பவத்தில் கைது செய்த நபர்களை பாஜகவைச் சேர்ந்தவர்கள் சிறையில் சென்று பார்த்ததாகவும், அவர்கள் இருவரை விடுவிக்க வலியுறித்தியதாகவும் தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம் 25- ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள சூழலில் ராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சர் பாஜக மீது குற்றம் சுமத்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *