Sexual harassment: பாதிரியார் கைது!

பெண்ணுக்குப் பாலியல் தொல்லை தந்த பாதிரியார் கைது! Sexual harassment

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லுார் மங்களா குடியிருப்பில் வசிப்பவர் ஜெகன், 39. இவர் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். தச்சநல்லுாரில், அருணாச்சலம் என்பவரது இடத்தில், சீயோனின் கோட்டை என்ற பெயரில் சர்ச் நடத்தி வந்தார்.

வழிபாட்டிற்கு வந்த, 39 வயது பெண்ணின் மொபைல் போன் எண்ணைப் பாதிரியார் வாங்கி இருந்தார். பெண்ணுக்குக் கணவர் இல்லை. மகன் மட்டும் இருப்பதை அறிந்த பாதிரியார், தினமும் மொபைல் போனில் பேசிப் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

மனமுடைந்த பெண், 40க்கும் மேற்பட்ட துாக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பாதிரியார் ஜெகனை தச்சநல்லுார் போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *