அகரம்சேரியில் நாளை விஜய் வருகை..!

வேலூரில் நாளை நடைபெறும் தவெக நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் தலைவர் விஜய் பங்கேற்க உள்ள நிலையில் ஆயிரம் தன்னார்வலர்கள் களப்பணி ஆற்ற உள்ளனர்.

வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் நாளை தவெக தலைவர் விஜய் கலந்து கொள்ளும் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பெண்கள் உட்பட ஆயிரம் பேர் தன்னார்வலர்களாகப் பங்கேற்க உள்ளனர்.

இந்தத் தன்னார்வலர்களுக்கு முன்னாள் DSP சபியுல்லா பயிற்சி வழங்கினார். கூட்டத்துக்கு வரும் பொதுமக்கள் தவெக தலைவர் விஜயைப் பார்க்கும் ஆர்வத்தில் முண்டியடிப்பார்கள் என்றும், அவர்களிடம் கோபப்படாமல் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

வாகன நிறுத்துமிடம், தண்ணீர் வசதி, மருத்துவ வசதி, நுழைவுப் பகுதி என அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் பொறுப்பைச் சரியாகச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *