தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊராட்சி மன்றங்களை வலுப்படுத்துவதற்கான ஒரு விரிவான முயற்சியைத் தொடங்க வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் காந்தி பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் நாள் தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி மன்றக் கூட்டங்கள் நடைபெற உள்ள நிலையில், ஊராட்சி மன்றங்களை மிகவும் பயனுள்ள அமைப்பாக மாற்றுவதற்கான சில ஆலோசனைகளைத் தெரிவித்துள்ளார்.
ஊராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள், உறுப்பினர்களுக்கான மதிப்பூதியத்தைக் கணிசமாக உயர்த்த வேண்டும். ஊராட்சித் தலைவருக்கு மாதம் 16 ஆயிரம் ரூபாயும், துணைத் தலைவருக்குப் பத்தாயிரம் ரூபாயும், உறுப்பினருக்கு எட்டாயிரம் ரூபாயும் மதிப்பூதியம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
ஓர் ஊரில் டாஸ்மாக் மதுக்கடையைத் திறக்குமுன் ஊராட்சிமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

