சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் சூர்யகுமார் இல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது -ரெய்னா!

Advertisements

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதிவரை நடைபெறுகிறது. இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வீரர்கள் விவரம்:-

1. ரோகித் சர்மா (கேப்டன்), 2. சுப்மன் கில் (துணை கேப்டன்) 3. விராட் கோலி 4. ஷ்ரேயாஸ் ஐயர் 5. கேஎல் ராகுல் 6. ஹர்திக் பாண்ட்யா 7. குல்தீப் யாதவ் 8. அக்சர் படேல் 9. வாஷிங்டன் சுந்தர் 10. பும்ரா 11. முகமது சமி 12. அர்ஷ்தீப் சிங் 13. ஜடேஜா 14. ரிஷப் பண்ட் 15. ஜெய்ஸ்வால்

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் இடம்பெறவில்லை.

இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் சூர்யகுமார் இடம்பெறாதது குறித்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர்  சுரேஷ் ரெய்னா, “சூரியகுமார் யாதவ் ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஒரு அங்கமாக இருந்தார். ஆனால் 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் சூர்யகுமார் இல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது.

அவர் ஒரு ஓவருக்கு 9 ரன்கள் முடிக்கக்கூடிய ஒரு 360 டிகிரி வீரர். சூர்யா அணியில் இருந்திருந்தால் ஒரு X-பேக்டராக இருந்திருக்கும். மிடில் ஆர்டரில் ஒரு முக்கியமான வீரரை இந்தியா இழந்துள்ளது. அவர் ஒரு கேம் சேஞ்சர்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *