திராவிட கோட்டையைத் தகர்த்த தவெக…. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தார் விஜய்….!

Advertisements
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் முடிவடைந்துள்ளன.
இதன்படி, 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
ஆளும் கட்சியாக இருந்த  திராவிட முன்னேற்றக் கழகம் 73 தொகுதிகள் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாகியுள்ளது.
இதுதவிர திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார்.
அ.தி.மு.க. 53 தொகுதிகள் வெற்றி பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *