நெல்லையில் இன்று விஜய் பிரசாரம் – குஷியில் தொண்டர்கள்..!

Advertisements

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், இன்று நெல்லையில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், இன்று நெல்லையில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார். இது தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி – தூத்துக்குடி புறவழிச்சாலையில் உள்ள தனியார் விடுதி அருகே நண்பகல் ஒரு மணியளவில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்தார்.

இதன் பின்னர், மாலை 3 மணி முதல் தவெக தலைவர் விஜய், தூத்துக்குடி நகர உட்கோட்டம், மைல் பகுதியில் இருந்து VVD சிக்னல் வரை சாலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாகக் கூறினார். பிரச்சாரத்திற்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றார்.

இதில், கலந்துகொள்ள வரும் தலைவர் விஜயின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் யாரும், அறவே பின்தொடரக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து, இந்நிகழ்வுகளில், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் – சிறுமியர், பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *