வரலாறு படைத்தது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

Advertisements

கேப்டன் ஸ்மிருதி மந்தனாவுடன் தொடக்க வீராங்கனையாகக் களம் இறங்கிய பிரதிகா ராவல் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். மறுபுறம் ஸ்மிருதி மந்தனா 20 ஓவர் போட்டிகளைப் போன்று அதிரடியாக விளையாடியதால் ஸ்கோர் எகிறியது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய மகளிர் அணி இன்று புதிய ரிக்கார்டை ஏற்படுத்தியுள்ளது.

அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட சாம்பியன்ஸ் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ள நிலையில் 3 ஆவது ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

கேப்டன் ஸ்மிருதி மந்தனாவுடன் தொடக்க வீராங்கனையாகக் களம் இறங்கிய பிரதிகா ராவல் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். மறுபுறம் ஸ்மிருதி மந்தனா 20 ஓவர் போட்டிகளைப் போன்று அதிரடியாக விளையாடியதால் ஸ்கோர் எகிறியது.

இருவரும் முதல் விக்கெட்டிற்கு 233 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 80 பந்துகளை எதிர்கொண்ட ஸ்மிருதி மந்தனா12 பவுண்டரி 7 சிக்சருடன் 135 ரன்கள் குவித்தார். பிரதிகா ராவத் 129 பந்துகளில் 20 பவுண்டரி 1 சிக்சருடன் 154 ரன்கள் எடுத்தார்.

அதன்பின்னர் விளையாடிய ரிச்சா கோஷ் 59 ரன்களும், தேஜல் ஹசப்ன்ஸ் 28 ரன்களும் எடுத்தனர்.

50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 435 ரன்கள் குவித்தது. ஆண்கள் மற்றும் பெண்கள் அணியைச் சேர்த்து இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் எடுத்துள்ள அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அந்த வகையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி புதிய ரிக்கார்டை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *