செந்தில் பாலாஜியின் 5 தொகுதிகள்.. டிவிஸ்ட் மேல் ட்விஸ்ட்.. அதிமுக ஷாக்.!

Advertisements
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு 4 நாட்களே இருப்பதால் அரசியல் கட்சியினர் இறுதிகட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கேவை தெற்கு தொகுதி தமிழ்நாடே உற்றுநோக்கும் தொகுதியாக மாறியுள்ளது.
தொகுதியில் அடுத்தடுத்து விவிஐபிகளை இறக்கி செந்தில் பாலாஜி தீவிர பிரச்சாரத்தல் ஈடுபட்டு வருகிறார். அவரின் வியூகத்தால் அதிமுக ஆஃப் ஆகியுள்ளது. திமுக தலைமைக்கு செந்தில் பாலாஜி அளித்துள்ள வாக்குறுதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கோவை மாவட்டம் கடந்த சட்டமன்ற தேர்தல்களில் அதிமுகவின் கோட்டையாகவே இருந்துள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்தாலும், கோவையில் ஒரு இடத்தில் கூட திமுக வெற்றி பெறவில்லை. கோவையின் 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி தான் வெற்றி பெற்றது. கோவையில் திமுகவை வெற்றி பெற வைப்பதற்காக இந்தமுறை செந்தில் பாலாஜியை களமிறக்கியுள்ளனர்.
இதனால் கோவை தெற்கு தொகுதியை தமிழ்நாடே உற்று நோக்கி கொண்டிருக்கிறது. செந்தில் பாலாஜியின் வருகை கோவை மாவட்டம் முழுவதும் திமுகவுக்கு பாசிட்டிவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹலோ மிஸ்டர் எடப்பாடி. செந்தில் பாலாஜியை கோவைக்கு அனுப்பியது நான் தான். செந்தில் பாலாஜி வருகையால் பழனிசாமி, பயந்தசாமியாக உள்ளார் என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
செந்தில் பாலாஜியை திமுக தலைமை பெரிதாக நம்பினாலும், கொங்கு மண்டலத்தில் அதிமுக கூட்டணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. மற்ற பகுதிகளை விட அதிமுக – பாஜக கூட்டணி கோவையில் பலம் வாய்ந்த கூட்டணியாகும். கட்சி கட்டமைப்பு, இரட்டை இலை சின்னம் செல்வாக்கு அதிகமாக உள்ளது.
இதற்கு எதிராக செந்தில் பாலாஜி நுணுக்கமாக திட்டங்களை தீட்டி வருகிறார். முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, காங்கிரஸ் சிதம்பரம், செல்வப்பெருந்தகை என்று முக்கிய தலைவர்கள் அவரை ஆதரித்து பிரச்சாரம் செய்துள்ளனர். மநீம தலைவர் கமல்ஹாசன் செந்தில் பாலாஜியை ஆதரித்து இன்று பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.
கோவைக்கு வரும் திமுக கூட்டணி விஐபிகள் தெற்கு தொகுதியில் தவறாமல் பிரச்சாரம் செய்துவிடுகிறார்கள். ஏற்கனவே தொகுதி முழுவதும் செந்தில் பாலாஜி நடந்தே சென்று பிரச்சாரம் செய்திருந்தார். அது முடிந்தவுடன் இப்போது அடுத்தடுத்து விஐபிகளை இறக்கி அதிரி புதிரி காட்டி வருகிறார். இதனால் அதிமுகவினர் அதிர்ச்சியடைந்தனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் குறைந்தது 5 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று செந்தில் பாலாஜி திமுக தலைமையிடம் வாக்குறுதி கொடுத்துள்ளாராம். 5 என்பது உறுதி, அதற்கு மேலும் வெற்றி பெறும் நோக்கில் பணியாற்று வருவதாக கூறப்படுகிறது. பணம் பரிசு என்று அதிமுகவினர் எதிர்பாராதளவுக்கு டபுள் மடங்கு சிறப்பு கவனிப்பு கொடுக்கவுள்ளார்களாம். இதனால் கோவை அதிமுகவின் கோட்டை என்ற நிலை மாறும் என திமுகவினர் நம்புகிறார்கள்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *