தொகுதி மறுவரையறை நிலைப்பாட்டில் மாற்றமா? – அமைச்சர் விளக்கம்!

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் தனது நிலைப்பாட்டை மாற்றிவிட்டதாக எழுந்துள்ள விமர்சனங்களுக்குத் தமிழக அரசு தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயான பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக அமைச்சர் நிர்மல் குமார் தெளிவுபடுத்தியுள்ளார். குறிப்பாக, தமிழ்நாட்டின் மின்சாரத் தேவை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் உள்ளிட்ட மாநில உரிமைகள் குறித்து விரிவாகப் பேசப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், 543 நாடாளுமன்றத் தொகுதிகள் என்ற எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இருக்கக் கூடாது என்பதும், தமிழ்நாட்டின் 39 எம்பிக்கள் பிரதிநிதித்துவம் குறையாமல் தொடர வேண்டும் என்பதும் தவெக மற்றும் தமிழகத்தின் உறுதியான நிலைப்பாடு என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. தென் மாநிலங்களை மட்டுமே தொகுதி மறுவரையறை அதிகமாகப் பாதிக்கும் என்பதால், இதில் யாரும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *