Shiv Das Meena: மீட்பு பணிகளில் 75 ஆயிரம் ஊழியர்கள்!

Advertisements

புயல் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் 75 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர் என தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா கூறினார்.

சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: சென்னை புறநகரில் தேங்கிய தண்ணீரை மதகுகள் மூலம் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செம்மஞ்சேரி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் படிப்படியாக குறைந்து வருகிறது. மழை நீர் தேங்கிய 866 இடங்களில் 19 ஆயிரம் பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். அடையாற்றில் வெள்ளம் குறைந்தது. வினாடிக்கு 37 ஆயிரம் கன அடி நீர் செல்கிறது. புயல் மற்றும் மீட்பு பணிகளில் 75 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். பெரும்பாலான இடங்களில் தண்ணீர் வடிந்துவிட்டது. வடியாத இடங்களில் மோட்டார் மூலம் வெளியேற்றப்படுகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் இணைந்து நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.செம்பரம்பாக்கம், புழல் ஏரி பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வட சென்னையில் நேற்று 2 முறையும், இன்று 4 முறையும் ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம் நடந்தது. தண்ணீர் தேங்கும் பகுதிகளில் மட்டுமே மின்சாரம் விநியோகம் செய்யப்படவில்லை. நிவாரண பணிகளுக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

ராஜேஷ் லக்கானி கூறுகையில், ”தண்ணீர் வடிந்த பகுதிகளில் மின்சார விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. மழைநீர் தேங்கிய பகுதிகளில் மக்கள் பாதுகாப்பு கருதி மின்சார விநியோகம் துவங்கவில்லை. பெரும்பாக்கம், எண்ணூர் உள்ளிட்ட 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது. பெரிய அளவில் பாதிப்பு இல்லாத பகுதிகளில் இன்று மாலைக்குள் மின்சார இணைப்பு வழங்கப்படும்” எனக் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *