chennai:லேப்டாப்பில் சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கிப் பெண் மருத்துவர் உயிரிழப்பு!

Advertisements

லேப்டாப்பில் சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கிப் பெண் மருத்துவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சேர்ந்த பெண் மருத்துவர் சரணிதா. இவர் ஒரு மாத பயிற்சிக்காகச் சென்னை வந்துள்ளார். சென்னையில் உள்ள மருத்துவமனையில் பயிற்சி பெற வந்த இவர், அயனாவரம் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியிருந்து தனது பயிற்சிக்குச் சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில், பெண் மருத்துவர் சரணிதா தனது விடுதி அறையில் தனது லேப்டாப்பிற்கு சார்ஜ் போட முயன்றபோது, மின்சாரம் தாக்கிச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பெண் மருத்துவரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவரது உடலைக் கைப்பற்றியபோது, சார்ஜரை கையில் பிடித்தபடியே உயிரிழந்தது தெரியவந்துள்ளது. லேப்டாப்பில் சார்ஜ் போடும் போதும் மின்சாரம் தாக்கிச் சம்பவ இடத்திலேயே பெண் மருத்துவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து பெண் மருத்துவரின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அயனாவரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *