“நீங்கதான் MLA, நீங்கதான் மந்திரி!”- தவெக அமைச்சர் கீர்த்தனா..!

Advertisements

அண்மையில் நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், சிவகாசி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, சி. ஜோசப் விஜய் அமைச்சரவையில் மிக இளம் வயதிலேயே தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார் எஸ். கீர்த்தனா.

அமைச்சராகப் பதவியேற்ற பிறகு, முதன்முறையாகத் தனது சிவகாசி தொகுதிக்கு உட்பட்ட செங்கமலநாச்சியார்புரம், வெள்ளையாபுரம், நடுவப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்குச் சென்று பொதுமக்களுக்கு அவர் நேரில் நன்றி தெரிவித்தார்.

அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர், “நான் அமைச்சர் ஆகிவிட்டதால் சென்னையிலேயே தங்கிவிடுவேன் என்று நினைக்க வேண்டாம். நான் என்றும் உங்கள் வீட்டுப் பிள்ளைதான். நீங்கள் இல்லை என்றால் எனக்கு இந்த முகவரியே கிடையாது.

இந்த 5 ஆண்டுகளில் சிவகாசி தொகுதிக்குத் தேவையான அத்தனை மாற்றங்களையும், அசுர வளர்ச்சியையும் நாம் நிச்சயம் கொண்டு வருவோம்.

நான் பெற்ற வெற்றி உங்களது வெற்றி. நீங்கள்தான் இங்கு MLA, நீங்கள்தான் அமைச்சர்!” என நெகிழ்ச்சியுடனும், உறுதியுடனும் பேசினார். இவரின் இந்த எதார்த்தமான பேச்சு சிவகாசி தொகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

inisterKeerthana #SKeerthana #Sivakasi #SivakasiNews #TVK #TamizhagaVettriKazhagam #VijayCabinet #KeerthanaSpeech

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *