“கடலூர் மக்களவை தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் நான், போட்டியிட மறுப்பதாக வெளியான பொய் செய்தியை வன்மையாகக் கண்டிக்கிறேன். இவ்வாறான பொய்ச்செய்தியை வெளியிட்டவர்கள் யாரெனக் கண்டறிந்து, அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன்.” என இயக்குனர் தங்கர்பச்சான் விளக்கம் அளித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024இல் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் அக்கட்சி சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியலைப் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ளார். காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திண்டுக்கல் தொகுதியில் கவிஞர் ம.திலகபாமா, அரக்கோணம் – வழக்கறிஞர் கே.பாலு, ஆரணி – முனைவர் அ.கணேஷ் குமார், கடலூர் – இயக்குனர் தங்கர் பச்சான், மயிலாடுதுறை – ம.க.ஸ்டாலின், கள்ளக்குறிச்சி – இரா. தேவதாஸ் உடையார், தருமபுரி – அரசாங்கம், சேலம் – ந.அண்ணாதுரை, விழுப்புரம் – முரளி சங்கர் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கடலூர் மக்களவை தொகுதி இயக்குனர் தங்கர் பச்சான் போட்டியிட மறுப்பு தெரிவிப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், அதற்குத் தங்கர் பச்சான் மறுப்பு தெரிவித்துள்ளார்.