Tvk fight : புசி ஆனந்த் -ஆதவ் அர்ஜுனா மோதல்!

Advertisements
தமிழக வெற்றி கழகத்தில் புதிதாக ஏற்பட்டிருக்கும் மோதலால் நடிகர் விஜய் மிகுந்த வேதனைக்குள்ளாகி இருக்கிறார்.தனது வலதுகரமாக இருக்கும் புசி ஆனந்தும் இடது கரமாக இருக்கும் ஆதவ் அர்ஜுனாவும் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஜான் ஆரோக்கியசாமியும் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.புதிதாகத் தமிழக வெற்றி கழகத்தைத் தொடங்கிய நடிகர் விஜய் முதன்முதலாகப் புசி ஆனந்தை நம்பித்தான் களத்தில் இறங்கினார். நடிகர் விஜய்க்கு பி ஆர் ஓ பணி செய்த பி.டி. செல்வகுமார் விலகிய நிலையில் புஷி ஆனந்த் அவருக்கு உதவியாளராக வந்து சேர்ந்தார். பாண்டிச்சேரியை சேர்ந்த புஷி ஆனந்த் அங்குள்ள புஸ்ஸி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது வரையிலும் தனது நம்பிக்கைக்குறிய முதல் நபராகப் புசி ஆனந்தை முன்னிறுத்தி தான் விஜய் செயல் பட்டு வருகிறார் .
தனது வேலைகள் எதுவாக இருந்தாலும் அவை அனைத்தையும் புசி ஆனந்திடம்தான் தெரிவிப்பார்
இதனாலையே புசி ஆனந்துக்கு வேலைப்பளு அதிகம் தலைவர் விஜய் அறிவிப்பு முதல் கடைசி கட்ட தொண்டன் வரை அனைத்து வேலைகளையும் தனது தலையில் அள்ளிப் போட்டுச் செய்வதால் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் தான் புசி ஆனந்த் தனது பணியைத் தொடர்கிறார் . வேலை பழு காரணமாகக் கட்சி தொடர்பான சில வேலைகளைப் புசி ஆனந்த் சரிவரச் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு. அதேசமயம் நடிகர் விஜய்யை தன்னைத் தவிர வேறு யாரும் அருகில் நெருங்கி விடக் கூடாது என்பதில் புசி ஆனந்த் மிகக் கவனமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது
இதற்கிடையே ஆதவ் அர்ஜுனாவை தனது கட்சியில் சேர்த்துக் கொண்ட நடிகர் விஜய் அவரிடம் தேர்தல் பணி குழுப் பொறுப்பை ஒப்படைத்தார்
இதேபோல் நடிகர் விஜய்யின் தேர்தல் பணிகளைச் செய்வதற்காக ஜான் ஆரோக்கியசாமி என்பவரும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.இந்த நிலையில் சமீப காலமாகத் தமிழக வெற்றி கழக தொண்டர்கள் தங்கள் பகுதிகளில் ஒட்டப்படும் வால்போஸ்டர் பேனர்களில் புசி ஆனத்துக்கும் முக்கிய இடம் கொடுக்கிறார்கள் அவரை வருங்காலமே அரசியல் சாணக்கியரே என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள்.குமரி மாவட்டத்தில் வீட்டுக்கு வீடு ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களில் விஜய் படத்துடன் புசி உனந்த் படமும் இருந்தது பின்னர் புசி ஆனந்த் படம் நீக்கும்படி உத்தரவிடப்பட்டது .இதற்கிடையே ரு
புசி ஆனந்த் பத்திரிகையாளர்களுடன் நல்ல தொடர்பு வைத்துக் கொள்வதில்லை அவசரத்திற்கு போன் செய்தால் கூட எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு அனைத்து பத்திரிகையாளர்களிடமும் இருக்கிறது.இந்த நிலையில் புசி ஆனந்த் தன்னிச்சையாகச் செயல்படுவதாகவும் அவர் தனக்கெனத் தனிப்பட்ட புகழைத் தேடிக் கொள்வதாகவும் தொண்டர்களுக்குச் சரியான வழிகாட்டுதல்களை தராமல் அவர்கள் பல சிரமங்களைச் சந்திப்பதாகவும் ஜான் ஆரோக்கிய சாமி நடிகர் விஜய் இடம் குற்றம் சுமத்தியதாகத் தெரிகிறது
இதேபோல் ஆதவ் அர்ஜுனாவும் தற்போது ஆதங்கப்பட ஆரம்பித்திருக்கிறார் நெல்லையில் கவின் படுகொலை சம்பவத்தின்போது நடிகர் விஜய் நேரடியாகச் சென்று ஆறுதல் தெரிவிக்க வேண்டும் என ஆலோசனை கூறி இருந்தார் ஆனால் ஜான் ஆரோக்கிய சாமியின் பேச்சைக் கேட்டு அவர் அங்குச் செல்லவில்லை தற்பொழுது இது சர்ச்சையான பேச்சாக மாறியிருக்கிறது நான் சொல்வதை நடிகர் விஜய் கேட்பதில்லை ஜான் ஆரோக்கியசாமி பேச்சைதான் கேட்கிறாரென அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.எனக்கு இப்போது எதற்காகத் தமிழக வெற்றி கழகத்தில் வந்து சேர்ந்தோம் என்று நினைக்கும் அளவுக்கு நான் இருக்கிறேன் என்று உச்சகட்டமாக அவர் புலம்பி இருக்கிறார்.இதற்கிடையே வருகிற சட்டமன்ற தேர்தலில் முழுமையான ஆலோசனை சொல்வதற்காகத் தேர்தல் வியூகம் தொடர்பாகப் பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டிருந்தார் அவர் சமீப காலமாகத் தமிழக வெற்றிக் கழகத்தில் என்னால் பணி செய்ய முடியவில்லையெனச் சில குற்றச்சாட்டுகளைக் கூறி ஒதுங்கி இருக்கிறார்
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்னும் தேர்தல் பிரச்சாரம் என வந்துவிட்டால் தனக்கு பக்கத் துணையாகச் சரியான ஆட்கள் இல்லை என்று ஏற்கனவே விஜய் ஆழ்ந்த யோசனையில் இருக்கிறார்.விஜய்யை பொறுத்த வரையில் புசி ஆனந்தை விட்டால் வேறு ஆள் கிடையாது என்ற நிலையில் இருக்கிறார் அதேசமயம் தற்பொழுது சுசி ஆனந்த்மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் வரத் தொடங்கியுள்ளன முன்னதாகப் பல தவெக தொண்டர்கள் புசி ஆனந்த் மீது குற்றம் சுமத்தி கட்சியை விட்டு வெளியேறியதும் குறிப்பிடத்தக்கது.தமிழக வெற்றி கழக தொண்டர்களைப் பொறுத்தவரையில் நடிகர் விஜய்க்கு துணையாக அவருக்குப் பக்கபலமாக இன்னும் சில நல்ல நபர்களை அவர் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள் . இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக விஜய் திரை மறைவில் ஒரு திட்டம் வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது
வெகுவிரைவிலேயே சினிமா துறையைச் சேர்ந்த நடிகர்கள் நடிகைகள் இயக்குனர்கள் கதாசிரியர்கள் எனப் பலர் தமிழக வெற்றி கழகத்தில் வரிசையாக வந்து சேர காத்திருக்கிறார்கள் .அவர்களில் சிலரை தனது பிரச்சாரத்துக்காகவும் தனக்கு வலது கை இடது கையாகப் பயன்படுத்தவும் விஜய் திட்டமிட்டு இருக்கிறார்.எனவே வெகுவிரைவிலேயே புசி ஆனந்த் ஜான் ஆரோக்கிய சாமி ஆதவ் அர்ஜுனா மோதலுக்கு விடை கிடைக்கும் என்று தெரிகிறது
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *