தொடர் நிலநடுக்கங்களால் குலுங்கும் மியான்மர்..!

இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 25-ந்தேதி 14 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதன்படி, அன்று மாலை 4.13 மணியளவில், ரிக்டரில் 3.6 அளவிலான நிலநடுக்கமும், மாலை 4.27 மணியளவில், ரிக்டரில் 3.5 அளவிலான மற்றுமொரு நிலநடுக்கமும் பதிவானது. அன்றிரவு 9.52 மணியளவில், ரிக்டரில் 3.9 அளவிலான நிலநடுக்கம் பதிவாகி இருந்தது.

இதேபோன்று, கடந்த 24-ந்தேதி மியான்மரில் இரவு 7.48 மணியளவில், ரிக்டரில் 3.4 அளவிலான நிலநடுக்கம் ஒன்று பதிவாகி இருந்தது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் உறுதிப்படுத்தியது.

நேற்றும் காலை 9.03 மணியளவில், ரிக்டரில் 3.6 அளவிலான நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. இந்த சூழலில், இன்று மதியம் 1.04 மணியளவில், ரிக்டரில் 3.4 அளவிலான நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 139 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இதனால், கடந்த 24-ந்தேதி ஒரு முறையும், கடந்த 25-ந்தேதி மூன்று முறையும், நேற்று ஒரு முறையும் இன்றும் என மியான்மரில் அடுத்தடுத்து 4 நாட்களில் 6 முறை ஏற்பட்டு நிலநடுக்க தாக்கம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *