“பெண்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வார்?” – டி.டி.வி. தினகரன் விமர்சனம்!

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை தொடங்கி வைக்கவே முடியாத முதலமைச்சர் விஜய் பெண்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வார்? என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தவெக ஆட்சிக்கு குறித்து பதிவிட்டுள்ளார். அதில், 10 வயது சிறுமியில் தொடங்கி மூதாட்டிகள் வரை அரங்கேறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் தவெக ஆட்சி நிர்வாகத்தின் கையாலாகத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன என்று தெரிவித்தார்.

முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றவுடன் கையெழுத்திட்ட மூன்று திட்டங்களில் முதன்மைத் திட்டமான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை தொடங்கி வைக்கவே முடியாத அவர்கள் பெண்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வார்? என்று கேள்வி எழுப்பினார்.

புதிய டிஜிபி நியமனத்திற்கு பின்பு தான் இந்த நிகழ்வு நடக்கும் என்று சொல்லப்படும் தகவல் உண்மையென்றால், தமிழகத்தில் குதிரை பேரம் அரசு எதற்கு ? என்றும் வினவியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *