Durai Murugan:டாஸ்மாக் மதுவில் கிக் இல்ல..Soft drink போல இருக்கு!

டாஸ்மாக் மதுவில் கிக் இல்லாததால் கள்ளச்சாராயத்தை நோக்கிச் செல்கின்றனர் என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

சென்னை:கள்ளச்சாராய விற்பனையை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்தார். அப்போது நடைபெற்ற விவாதத்தில் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:

* டாஸ்மாக் மதுவில் கிக் இல்லாததால் கள்ளச்சாராயத்தை நோக்கிச் செல்கின்றனர்.

* உழைப்பவர்களின் அசதியை போக்க அவர்களுக்கு மது தேவை.

* அரசாங்கம் விற்கும் சரக்கு அவர்களுக்கு Soft drink போல மாறிவிடுகிறது.

* கள்ளச்சாராயத்தை தடுக்க தெருவுக்குத் தெரு போலீஸ் ஸ்டேஷன் திறக்க முடியாது.

* கிக் வேண்டும் என்பதற்காகச் சிலர் கள்ளச்சாராயத்தை குடிக்கின்றனர்.

* மனிதனாய் பார்த்துத் திருந்தாவிட்டால் இதனை ஒழிக்க முடியாது. கள்ளச்சாராய விற்பனைக்குத் துணைபோகக்கூடிய அதிகாரிகளைத் தூக்கில் போடுவோம் என்று கூடச் சட்டம் இயற்றலாம். எல்லாத்துக்கும் ஒரு நியாயம் வேண்டாமா. நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். இனி நடப்பது நல்லவையாக இருக்கட்டும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *