போரை நிறுத்துங்கள் இல்லையென்றால் அதிக வரிக்கு ஆளாவீர்கள்..!

Advertisements

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வராவிட்டால் டிரம்ப் ரஷ்யாவுக்கு 50 நாள் கெடு விதித்துள்ளார்.

உக்ரைன் போரை 50 நாட்களில் முடிவுக்குக் கொண்டு வராவிட்டால் ரஷ்யா மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார். புடினின் போர் நடத்தை ஏமாற்றம் அளிக்கின்றது. அடுத்த 50 நாட்களுக்குள் உக்ரைன் உடன் போர் நிறுத்தத்திற்கு புடின் ஒப்புக் கொள்ளாவிட்டால் ரஷ்யா மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும்.

எங்களுடன் ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால் வரி 100 சதவீதம் விதிக்கப்படும்.

மேலும் ரஷ்யாவிற்கு எதிரானப் போரில் உக்ரைனை ஆதரிக்க நேட்டோவிற்கு அமெரிக்கா அனுப்பும் ஆயுதங்களில் பேட்ரியாட் ஏவுகணை அமைப்புகள், பேட்டரிகள் இருக்கும். புடின் அமைதி பற்றிப் பேசினார், ஆனால் உக்ரைன் நகரங்களைத் தொடர்ந்து தாக்கியுள்ளார். இவ்வாறு டிரம்ப் கூறினார்.

வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தைக்காக, டொனால்டு டிரம்புடன் இணைந்த நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட், ”நான் புடினாக இருந்தால் அமெரிக்க அதிபரின் எச்சரிக்கையைப் பற்றி யோசித்திருப்பேன்” என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *