Daughter Murder: தாய்க்கு 7 ஆண்டு சிறை!

Advertisements

6 வயது பெண் குழந்தையை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த சந்திரசேகரனின் மனைவி பவித்ரா தனது 6 வயது மகள், 3 வயது மகன் ஆகியோரை அழைத்துக்கொண்டு 2019ஆம் ஆண்டு சென்னை வந்துள்ளார். குடும்ப பிரச்சினை மற்றும் மன அழுத்தத்தில் இருந்த பவித்ரா தனது குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.
அதனால் மெரினா கடற்கரைக்கு சென்ற அவர், தன் மகளை கொலை செய்ததுடன், மகனை கொலை செய்வதற்காக பிளேடால் கழுத்தில் அறுத்ததுடன், தன்னைத்தானே பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்ட மூன்று பேரை பார்த்த மெரினா கடற்கரை குதிரை ஓட்டிகள், அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில், சிறுமி உயிரிழந்த நிலையில், தாயும் மகனும் உயிர் பிழைத்தனர். இதற்கிடையே பவித்ரா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை சென்னை அல்லிகுளம் வளாகத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி T.H.முகமது பாரூக் முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தனது மகளை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் குற்றசெயலில் ஈடுபடவில்லை என்பதால் கொலை என பதிவான வழக்கை, கொலை செய்யும் நோக்கமில்லாமல் தாக்குதல் என்ற பிரிவாக கருத வேண்டுமென உத்தரவிட்டார்.

மேலும், குடும்ப பிரச்சினை மற்றும் மன அழுத்தம் காரணமாக அவர் இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவதாக குறிப்பிட்டு, பவித்ராவுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *