Shubhanshu Shukla : பூமிக்கு திரும்பிய இந்திய விண்வெளி வீரர் என்ன செய்தார் தெரியுமா? 

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றிருந்த முதல் இந்திய வீரர் சுபான்சு சுக்லா  கடந்த 18 நாட்களாக வானவெளி வீதியில் தங்கி 7 விதமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு தற்பொழுது பூமிக்கு புறப்பட்டுள்ளார் இதுபற்றிய சிறப்புச் செய்தியை இப்போது காணலாம்.
அமெரிக்காவில் உள்ள ஆக்சியம் ஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனம் நாசா இஸ்ரோ மற்றும் ஐரோப்பிய விண்வெளி அமைப்புடன் இணைந்து கடந்த ஜூன் மாதம் 25 ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு நான்கு விண்வெளி வீரர்களை அனுப்பியது .இவர்கள் ஸ்பேஸ் என்ற நிறுவனத்தின் டிராகன் விண்கலம்மூலம் விண்வெளியை நோக்கிப் பயணித்தனர் .
இதில் இந்திய விமானப்படை வீரர் சுபான்சு சுக்லா அமெரிக்காவின் வெக்கிவிசன் ஹங்கேறியின் திபோர் சுப், மற்றும் ஹோலத்தின் ஸ்லோ ரோஸ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர் .இவர்கள் சென்ற விண்கலம் 28 மணி நேர பயணத்திற்கு பிறகு சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது அதாவது ஜூன் மாதம் 26 ஆம் தேதி மாலை அந்த டிராகன் விண்கலம் வானவெளி வீதியை அடைந்தது .இந்தியா சார்பில் முதன்முதலாக விண்வெளிக்குச் சென்ற சுபான்சு சுக்லா பிரதமர் மோடி உடன் கலந்துரையாடினார் அப்பொழுது வரைபடத்தில் காண்பதை விட விண்வெளியிலிருந்து இந்தியா மிகவும் பிரம்மாண்டமாகக் காட்சியளிப்பதாகக் கூறினார் .இதற்கிடையே புவி ஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் பயிர்களின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை ஆய்வு செய்வதற்காகத்தான் சுபான்சு சுக்லா உட்பட நான்கு விண்வெளி வீரர்கள் அங்கு அனுப்பப்பட்டனர் அவர்கள் பூமியிலிருந்து பாசிப்பயறு மற்றும் வெந்தயக்கீரை விதைகளை எடுத்துச் சென்றனர்.
அங்கு விதைகளை விதைத்து முளைக்க வைத்துத் தினமும் ஆய்வு செய்தார்கள் .இதன் மூலம் விண்வெளிக்கு எதிர்காலத்தில் யாராவது சென்றால் அங்கு உணவுக்குத் தட்டுப்பாடு இருக்காது என்பது சிறப்பு அம்சம் ஆகும். மொத்தம் உள்ள 60 ஆய்வுகளில் ஏழு முக்கிய ஆய்வுகளைச் சுபான்சு சுக்லா மேற்கொண்டு தற்பொழுது பூமிக்கு திரும்பி உள்ளார் .சர்வதேச விண்வெளியில் 18 நாட்கள் தங்கி இருந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட சுபான்சு சுக்லா உள்ளிட்ட குழுவினர் தங்களது ஆய்வுகளை முடித்துக் கொண்டு வெற்றிகரமாக டிராகன் விண்கலம்மூலம் பூமியை நோக்கிப் புறப்பட்டனர்
இந்திய நேரப்படி திட்டமிட்டதற்கு பத்து நிமிடங்கள் தாமதமாக நேற்று மாலை 4:45 மணியளவில் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து டிராகன் விண்கலம் தனியாகப் பிரிந்து புறப்பட்டது .இந்த விண்கலம் 22 மணி நேர பயணத்திற்கு பிறகு 17,000 கிலோ மீட்டர் வேகத்தில் கீழே வருகிறது
அதேசமயம் ஃபிளாஷ் டவுன் என்ற முறையில் அமெரிக்காவின் கலிபோர்னியா அருகே இன்று மாலை 3 மணி அளவில் கடலில் மெதுவாக இறங்க இருக்கிறது .இதன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் நுழைந்த முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்த சுபான்சு சுக்லா இந்தியாவிற்கே மிகப்பெரிய பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *