
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் , சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் தென்கொரிய பூசனில் நடைப்பெற்ற விழாவில் சந்தித்துப் பேசிக் கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட டிரம்ப் சீன அதிபர் ஜின்பிங் தன்னுடைய சிறந்த நண்பர் என்றும் தங்களுடனான நட்பு நீண்ட காலம் தொடர வேண்டும் என்றும் கூறினார்.
தாங்கள் இரு நாடும் பல ஒப்பந்தங்களில் ஏற்கனவே கையெழுத்தி இட்டிருக்கிறது. அதேபோல் இப்பொழுதும் சில உடன்படிக்கையில் கையெழுத்து இடுகிறது என்று கூறினார்.
நம்முடைய இருநாடுகளின் நட்பும் நீண்ட காலம் தொடர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். சீன அதிபரைச் சந்தித்துப் பேசியப் பின்னர் டிரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்பொழுது அவர், தங்கள் இருவருடைய சந்திப்பு மிகவும் வெற்றிகரமாக அமைந்தது என்று கூறினார். சீன அதிபருடன் உடன்படிக்கை வைப்பது எளிதான ஒன்று அல்ல, மிகவும் கடினமான ஒன்று என்று தெரிவித்தார்.
தங்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் நன்றாகத் தெரியும் , அதனால் தங்களிடையே நல்ல நட்பு எப்பொழுதும் தொடரும் என்றும் கூறினார்.



