
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது.
இதில், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களில் இருந்து மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நீட் தேர்வு நடத்தப்பட உள்ளது. இத்தேர்வில் நாடு முழுவதும் சுமார் 22 லட்சத்து 79 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்த தேர்வுக்காக, ஒவ்வொரு மையத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இத்தேர்வு மதியம் 2:00 மணிக்கு தொடங்கி மாலை 5:20 மணி வரை நடைபெற உள்ளது.
தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில், புகைப்படம் ஒட்டப்பட்ட நுழைவுச் சீட்டுடன் ஆதார், பான் உள்ளிட்ட அடையாள அட்டை எடுத்து வர வேண்டும் என்று கூறியுள்ளது.
பெல்ட், தொப்பி, கைபேசி, ப்ளூடூத், வாட்ச், அணிகலன்கள் உள்ளிட்டவைகள் எடுத்துச் செல்லக்கூடாது என்று தெரிவித்துள்ளது.
இதையடுத்து, தடிமனான அடிப்பாகம் கொண்ட காலணிகள் மற்றும் பூட்ஸ் அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹிஜாப், கிர்பான் போன்ற மத நம்பிக்கை சார்ந்த ஆடைகளை அணிந்து வருபவர்கள், சோதனைக்காக 12:30 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.


