எலான் மஸ்க்கை விசாரணை அதிகாரியாக நியமித்த அதிபர் டிரம்ப்!

Advertisements

வாஷிங்டன்:

அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனுக்கு பட்ஜெட்டில் ஆண்டுதோறும் 1 டிரில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு அதிபராக இருந்த ஜோபைடன் 895 பில்லியன் டாலரை ஒதுக்கியிருந்தார்.

இந்தநிலையில் பென்டகனுக்கு நிதி ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இதையடுத்து அதிபர் டிரம்ப் பென்டகனில் நடந்துள்ள நிதி முறைகேட்டைக் கண்டறிவதற்காக, சிறப்பு அரசு பிரதிநிதியாக எலான் மஸ்க்கை நியமிக்க முடிவு செய்துள்ளார்.

கல்வித்துறையை ஆய்வு செய்யுமாறு எலான் மஸ்க்கிடம் கூறுவேன். அதன்பிறகு, ராணுவத்தில் ஆய்வு செய்யச் சொல்வேன்.

பென்டகனில் நடந்த பல நூறு மில்லியன் டாலர் முறைகேடுகளை விரைவில் கண்டுபிடிப்போம்.

இதற்கிடையே எதிர்க்கட்சியினர், அரசின் ரகசியங்களை எலான் மஸ்க்கிடம் ஒப்படைக்கும் முடிவு ஆபத்தானது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பல்வேறு தரப்பினரும் டிரம்பின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

பென்டகனுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள பல்வேறு நிறுவனங்களில், எலான் மஸ்க்கின் நிறுவனங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *