உடல் பருமனுக்கு எதிராக விழிப்புணர்வு – மோகன்லாலை பரிந்துரைத்த பிரதமர் மோடி!

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி கடந்த முன்தினம் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் உரையாற்றும்போது, “உடல் பருமனை எதிர்க்க மக்கள் வலுவான குரல்களை எழுப்ப வேண்டும். உணவில் எண்ணெய் பயன்பாட்டைக் குறைத்து, எண்ணெய் உட்கொள்ளலை 10 சதவீதம் குறைக்க வேண்டும்” எனப் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

இந்தச் சூழலில், உடல் பருமனை எதிர்க்க உதவுவதற்காக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா மற்றும் நடிகர்கள் மோகன்லால், மாதவன் உள்ளிட்ட 10 பேரைப் பரிந்துரை செய்து பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

“உடல்பருமனுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துவதற்காக, உணவில் எண்ணெய் அளவை குறைத்து ஆரோக்கிய விழிப்புணர்வை அதிகரிக்க நான் இந்த 10 பேரைப் பரிந்துரைக்கிறேன்” என அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *