
அரசியலமைப்புச் சட்டத்தில் எல்லா மதங்களுக்கும் சமமான உரிமை வழங்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இந்தியாவில் மக்கள் அமைதியாக வாழ்வதற்கு அரசமைப்புச் சட்டம்தான் காரணம் எனத் தெரிவித்தார்.
சுதந்திரம் பெற்ற மற்ற நாடுகள் இரண்டு மூன்று நாடுகளாகச் சிதறிப்போய் விட்டதாகவும், இந்தியா மட்டும் தான் 70 ஆண்டுகளுக்கு மேல் நீடித்திருப்பதாகவும் கூறினார்.
கிருஸ்துவ மதம், புத்த மதம், சீக்கிய மதம், இந்து மதம் ஆகியற்றுக்குச் சட்டத்தைத் திருத்தாமல், இஸ்லாமிய மதத்திற்கு மட்டும் திருத்தம் செய்வது எந்த விதத்தில் நியாயம்? என்று கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பினார்.




