
திமுக ஆட்சியில் நடக்கும் அவலங்களைப் பற்றித் தொடர்ச்சியாகத் தான் மட்ட்டுமே பேசி வருவதாகவும், திமுகவின் கருப்பு பணத்தில் தொடங்கப்பட்ட ஜி ஸ்கொயர் நிறுவனத்தை மூடுவது தான் முடிவாக இருக்கும், எனச் செய்தியாளர்கள் சந்திப்பில் சவுக்கு சங்கர் தெரிவித்தார்.
ஜி, ஸ்கொயர் விவகாரம் தொடர்பாகச் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சவுக்கு சங்கர் விசாரணைக்கு ஆஜாரானார்.
பின்னர் செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய சவுக்கு சங்கர் வருமான வரித்துறை கையகப்படுத்திய இடத்தை விற்பனை செய்ய முயன்ற ஜி.ஸ்கொயர் மீது கடந்த வாரம் தான் காவல் ஆணையர் அலுவகத்தில் அளித்த புகாரின் மீதான சம்மனுக்கு ஆஜராகக் காவல் ஆணையர் அலுவலகத்தியில் ஆஜராகி உள்ளதாகத் தெரிவித்தார்.
ஜி ஸ்கொயர் நிர்வாகம் வருமான வரி துறையினர் அட்டாச் செய்துள்ள சொத்துக்களை பொதுமக்களை ஏமாற்றும் விதமாக விற்பனை செய்ய முயற்சித்து வருகின்றனர். ஜி ஸ்கொயர் விளம்பரத்தால் அப்பாவி பொதுமக்கள் ஏமாற்றம் அடைவார்கள் எனவும்,
மேலும் ஜி ஸ்கொயர் விவகாரம்குறித்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர் என்றும்சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீது சரியான விசாரணை நடவடிக்கை எடுக்கத் தரிவிட்டால் நீதிமன்றத்தை நாடி சிபிஐ விசாரணைக்கு முறையிடப் போவதாகவும்,
ஜி ஸ்கொயர் மீது புகார் அளித்தபிறகு அவர்கள் வருமான வரித்துறையினர் அட்டாச் செய்துள்ள சொத்துக்கள் வேறு விற்பனை செய்யும் சொத்துக்கள் என்று கூறி என்மீது பொய்யான புகாரை அளித்துள்ளனர் என்றும் தன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று .ஜி ஸ்கொயர் நிறுவனம் நினைப்பதாகவும், வருமான வரி துறையினருக்கு *38 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும்.
ஜி ஸ்கொயர் ஈடிஏ என்ற நிறுவனம் இருந்து 2023 ஏப்ரலில் மமாதம் அன்று இந்தச் சொத்தை வாங்குகி உள்ளதாகக் குற்றம் சாட்டினார். ஈடிஏ நிறுவனத்திடமிருந்து ஜி ஸ்கொயர் ஒரே சொத்தாகத் தான் வாங்குகிறது, அதைத்தான் தற்போது வருமான வரித்துறை அட்டாச் செய்துள்ளதாகவும்
ஜீ ஸ்கொயர் இடமுள்ள வேறு இடங்களும் அட்டச் செய்யப்பட வாய்ப்புள்ளது இது தொடர்பாகத்தான் காவல்துறையினர் என்னிடம் விசாரித்தனர் எனவும்அதற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்து உள்ளதாகவும்
Youtube சேனல்களைக் காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு உள்ளே அனுமதிப்பதில்லை அதனால்தான் தான் எங்கு youtube சேனல் இருக்கிறதோ அங்கு அங்குப் பேட்டிபேட்டி அளிப்பதாகவும்,
கடந்த முறை புகார் அளித்துவிட்டு பத்திரிக்கையாளர் மன்றத்தில் இது சம்பந்தமாக விரிவாகக் கூற வேண்டும் என்பதனால் அங்குப் பத்திரிகையாளர் சந்தித்ததாகவும், மேலும் தான் எப்பொழுதும் ஒரே மனநிலையில் இருக்க முடியாது எனவும், மணல் கடத்தலை பற்றி முதலில் பேசியது தாங்கள் தான் என்றும்மத்த எந்த மீடியாவும் அதைப் பற்றிப் பேசவில்லை, தொடர்ந்து ஒன்றை ஆண்டு காலமாகத் திமுக ஆட்சியில் நடக்கும் அவலங்களைப் பற்றித் தொடர்ச்சியாகத் தான் மட்ட்டுமே பேசி வருவதாகவும்
தான் பணம் வாங்கி பேசுகின்றார்கள் என்றால்யார் நியாயமாகப் பேசுகிறார்கள் என்றும் என்பதை மக்கள் கண்டுபிடித்து விடுவார்கள்.தமிழ்நாட்டில் எது ஆளும் கட்சி எது ! தனக்கே தெரியாது எனவும்.
ஆந்திராவில் ஒரு வங்கியைக் கொள்ளை அடித்துத் தான் தான் இந்தச் சவுக்கு சேனலை ஆரம்பித்து நடத்தி வருவதாக, ராசா கிராண்ட் பற்றி நான் இதுவரை பேசவில்லை.
ஜி ஸ்கொயர் நிறுவனத்தை மூடுவது தான் முடிவாக இருக்கும் திமுகவின் கருப்பு பணத்தில் தொடங்கப்பட்டதுஎன செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

