Trending Social Media Atrocities: ஒரு Like வாங்குவற்காக இப்படியா?

Trending Social Media Atrocities: வீடியோ போட்டு லைக் வாங்குவற்காக சமூக வலைதள பித்தர்கள் ஏராளமான பேர் உள்ளனர். அந்த வரிசையில் ராட்சத பாம்பை காதலன் போல் கட்டிப்பிடித்த பெண்ணின் கதி பாருங்க..!

ரிஸ்க் எடுக்கர்துன்னா ரஸ்க் சாப்பிடுவது  போல அப்படின்னு லைக் எனக்கு வேணும் அவ்வளவு தான்.  பெண்கள் கழுத்தில் மாலை செயின் போடுவாங்க . பாம்பு போடுவாங்களா? கழுத்தில் பாம்புடன் இருக்கும் வீடியோ தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு பெண் பல வண்ணங்களில் இருக்கும் ரெயின்போ பாம்பு எனும் பாம்பை தன் உடலில் சுற்றிக்கொண்டு கட்டிப்பிடித்தார் போல ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில்தான் இந்த வீடியோ தற்போது பரவலமாக உலா வந்து கொண்டிருக்கிறது. அந்த பெண், வெளிநாட்டில் இருக்கும் ஒரு உயிரியல் பூங்காவில் வேலை பார்ப்பவர்.

தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில், அப்பெண் ரெயின்போ பாம்பை வைத்துக்கொண்டு அது குறித்து வீடியோவில் பேசுகிறார். மேலும், “சூரிய ஒளி பட வேண்டும் என்பதற்காக எனது டார்லிங்கை வெளியில் அழைத்து வந்தேன். இவள் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறாள் இல்லையா? இவளது இந்த அழகு இது போன்று வெயில் அடிக்கும் நாட்களில்தான் பெரிதாக வெளியில் தெரியும்..” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *