உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சி – டிரம்ப்!

Advertisements

வாஷிங்டன்:

ரஷியா-உக்ரைன் இடை யேயான போர் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் ஏராளமான ராணுவ வீரர்கள் மற்றும் பொது மக்கள் பலியாகி உள்ளனர்.

இதற்கிடையே அமெரிக்க அதிபராகச் சமீபத்தில் பதவி யேற்ற டிரம்ப், ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்தார்.

இதற்காக ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகத் தெரிவித்து இருந்தார்.

மேலும் போரை முடி வுக்குக் கொண்டுவருவது குறித்து அமெரிக்க, ரஷிய அதிகாரிகள் பேசி வரு கின்றனர் என்று தெரி வித்தார். அதேபோல் டிரம்பின் முயற்சியைப் புதின் பாராட்டி இருந்தார்.

இந்த நிலையில் புதினுடன் தொலைபேசியில் பேசியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் டிரம்ப் பயணம் செய்தபோது தனியார் ஊடகத்துக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறும்போது, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் பேசினேன்.

போர்க்களத்தில் ஏற்படும் உயிரிழப்புகுறித்து புதின் கவலைப்படுகிறார். மக்கள் இறப்பதை நிறுத்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

இறந்த அனைவரும் இளைஞர்கள், அழகான வர்கள். அவர்கள் உங்கள் குழந்தைகளைப் போன்றவர்கள்.

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உறுதியான திட்டம் என்னிடம் இருக்கிறது. இது வேகமாக இருக்கும் என்று நம்புகிறேன். ஒவ்வொரு நாளும் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் போர் உக்ரைனில் மிகவும் மோசமாக உள்ளது. இந்த மோசமான விஷயத்தை நான் முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *