
திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து செந்தண்ணீபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை வழிமறித்து பேருந்தை இயக்கக் கூடாது எனக் கூறி தொழிற்சங்கத்தினர் ஓட்டுநர்மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி: போக்குவரத்து தொழில் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொ.மு.ச வைச்சேர்ந்தவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடாமல் பேருந்து இயக்கி வருகின்றனர். அதன்படி திருச்சி மாவட்டம் மலைக்கோட்டை கிளையில் ஓட்டுநராகப் பணியாற்றும் மதன்குமார் என்பவர் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து செந்தண்ணீபுரம் நோக்கிச் சென்று கொண்டு வந்துள்ளார்.
அப்பொழுது பாலக்கரை பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது அந்தப் பேருந்தை மறித்த அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த சேகர் மற்றும் சிஐடியு தொழிற்சங்கத்தை சேர்ந்த பழனியப்பன் ஆகிய இருவர் பேருந்தை இயக்கக் கூடாது எனக் கூறி மதன்மாரிடம் கூறி உள்ளனர். மேலும் மதன்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குவாதத்தைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மதன்குமார் பேருந்து மீண்டும் மலைக்கோட்டை கிளை பணிமனையில் நிறுத்திவிட்டு அவரைத் தாக்கிய பழனியப்பன் மற்றும் சேகர் ஆகியோர் மீது பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

